Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Adikumbeswara Swamy and Mangalambigai Amman Temple, Kumbakonam |

அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் திருக்கோயில்- கும்பகோணம்


அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் திருக்கோயில்- கும்பகோணம்



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் 

இறைவி :ஶ்ரீ மங்களாம்பிகை அம்பாள்

தல மரம் : வன்னி மரம்

தீர்த்தம் : மகாமகம் குளம், காவிரி தீர்த்தம்

thanjavurDistrict_ AgasthiswararTemple_KoranattukaruppurNatham-shivanTemple


Arulmigu Adikumbeswara Swamy and Mangalambigai Amman Temple, Kumbakonam | அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் திருக்கோயில்- கும்பகோணம் தல வரலாறு

உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, சிவபெருமானின் கட்டளையின்படி பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்.

சிவலிங்கத் திருமேனி மணல் லிங்கம். பாணத்தின் உச்சி கும்பத்தின் வாயைப் போலவுள்ளது. *கும்பேஸ்வரர் மண்ணால் ஆன குடவடிவம் உடையவர் என்பதால் தங்கக் கவசம் சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் மட்டும் புனுகு சாத்தி வழிபாடு செய்யப்படும்.

அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாயிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றன. *சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை நோக்கி அம்பு எய்தபோது கிராதமூர்த்தி என்ற (வேடர்) பெயரைப் பெற்றார்.

*தம்மை அன்போடு தொழுவார்க்குத் திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. *இந்த அன்னையானவள் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்பவள்.

இறைவன் இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திர பீடேசுவரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து, இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்திபீடமாகி, 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள்.



மகாமகக் குளம்:

கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். பக்தர்களின் பாவங்கள் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது.

இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. ஏழாம் நூற்றண்டில் வாழ்ந்த நாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. *இன்று கும்பகோணம் நகரத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாக விளங்குவது இக்கோவிலே. *ஆதிகும்பேஸ்வரர் கோவில் மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் உடையது. கிழக்கிலுள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். இராஜகோபுரம் சுமார் 128 அடி உயரமுடையதாகும்.





திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில்,
கும்பகோணம்- 612 001, ,கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
+91-435- 242 0276.



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.



ஆலயம் அமைவிடம்:

கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் இத்தலம் இருக்கிறது.